குடும்பன், மூப்பன், காலடி, பண்ணாடி, வாதிரியார், பள்ளர்,தேவேந்திர குலத்தார் உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடப்படும் என கடந்த இடைத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலின்போது அதிமுக வாக்குறுதி அளித்தது.
ஆனால், அதிமுக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி பெயர் மாற்ற அரசாணை வெளியிடாமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வருவதாகக் கூறி தமமுக திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் சி.பி. ராஜபாண்டியன் தலைமையில் அம்மையநாயக்கனூர் கொடைரோட்டில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தங்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை திட்டமிட்டு மாநில அரசு காலம் தாழ்த்தி வருவதால் வரும் 2021 சட்டப் பேரவை தேர்தலில் அதிமுகவை தேவேந்திர குல வேளாளர்கள் புறக்கணிப்போம் என்று கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.