ETV Bharat / briefs

அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அதிமுக - திமுக ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌எம்.பி. சாடல்! - திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பரராயன்

ஈரோடு: டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஏழு உறுப்பினர்கள் கொண்ட திமுகவினரால் தலைவராக முடியவில்லை என்றும், அதிகார துஷ்பிரயோகத்தால் மூன்றே உறுப்பினர்களை கொண்ட அதிமுகவைச் சேர்ந்தவர் தலைவராக உள்ளார் என்று திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பராயன் குற்றச்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பரராயன்

author img

By

Published : Jun 9, 2020, 12:01 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாதிபாளையத்தில் உடையாம்பாளையம் அம்மன்கோயில் வீதியில் 200 மீட்டர் சாலைப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," கோபிசெட்டிபாளையத்தில் திமுகவை சேர்ந்த தொழிலதிபர்களை அதிமுகவில் இணைய அமைச்சர் செங்கோட்டையன் மிரட்டவருகிறார். அமைச்சர் யார் யாரை மிரட்டினார் என்பதை ஆதாரத்தோடு நிரூபிப்பேன்.

டிஎன் பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக மூன்று உறுப்பினர்கள் உள்ள அதிமுக, தலைவர் பதவியில் உள்ளது. அதிகார துஷ்பிரயேகத்தால் 7 பேர் கொண்ட திமுக உறுப்பினர்கள் எதுவும் செய்யமுடியவில்லை. குள்ளம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட உடையாம்பாளையத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியை முடிக்கவேண்டும். இல்லாவிட்டால் போராட்டங்களில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.