திருப்பூர் மாவட்டத்தில்ருந்து தற்போது வரை 32 சிறப்பு ரயில்கள் மூலம் ஒடிசா, பிகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் எனப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 45 ஆயிரம் தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தனிப்பட்ட முறையில் தனியார் பேருந்துகள் ஏற்பாடு செய்து, சுமார் 15 ஆயிரம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சொந்த ஊர் செல்ல வேண்டும் என விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், இன்னும் அங்கு செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.
இதனிடையே கடந்த ஒரு வாரமாக சிறப்பு ரயில்கள் எதுவும் இயக்கப்படாத நிலையில், இன்று அசாம் மாநிலத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் திருப்பூரிலிருந்து 800 வெளிமாநில தொழிலாளர்கள் பரிசோதனைக்குப் பின்பு அனுப்பப்பட்டனர். இந்தச் சிறப்பு ரயில் சென்னை சென்று அங்கிருந்து 800 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, அதன்பின் அசாம் மாநிலம் செல்கிறது.
அடுத்த அடுத்த நாள்களில் சிறப்பு ரயில்களில் செல்ல விண்ணப்பித்த அனைவரும், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.