உத்தரப்பிரதேசத்தில் பாபேரு கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாரஸ் எனும் கிராமத்தில், வீடு தீப்பிடித்ததால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் இறந்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அலுவலர் ஜெய்ஷியாம் பாண்டே கூறியதாவது;
'இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை (மே 19) அன்று முன்னிதேவி (70) அவர்களின் மகள் ஆர்த்தி(33), மருமகள் ரேகா( 35) இரவு சமையல் செய்யும் போது நடந்துள்ளது. இதில் முன்னிதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் தீக்காயங்களுடன் பின்னர் இறந்துள்ளனர் என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த மூன்று பேரின் உடற்கூறாய்வு முடிந்த பிறகு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்’எனக் கூறினார்.