திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகளவில் பரவிவரும் சூழலிலும் காவல் துறையினர் தங்களது பணிகளை பொதுமக்களுக்காக தொடர்ந்து செய்துவருகின்றனர்.
இதனால், அவர்கள் கரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கேட்டர்பில்லர் தொழிற்சாலை சார்பில் பத்தாயிரம் முகக்கவசங்கள், 200 பெட்டி சானிடைசர்கள் ஆகியவற்றை திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் வழங்கப்பட்டது.