ETV Bharat / briefs

கல்குவாரிக்கு தடை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் மனு

author img

By

Published : Jun 8, 2020, 9:12 PM IST

ஈரோடு: அந்தியூர் அருகே கல்குவாரி வேலைகளால் குடியிருப்பு பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

People gave petition
People gave petition

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி மஞ்சக்கரல் மேடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. குடியிருப்பு அதிகமுள்ள இப்பகுதியின் காலி இடத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியொன்று செயல்பட்டு வருகிறது.

சட்டரீதியாக அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் இக்கல்குவாரியால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள், தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இதுகுறித்து அப்பகுதியினர் தெரிவிக்கையில், “நாள்தோறும் வெடிகளை வைத்து ஜல்லிக்கற்களை பிரித்தெடுத்து வருவதால் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்படுகிறது. அடிக்கடி வெடிகளை வைப்பதால் மக்களுக்கு காது சவ்வில் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேசமயம் கல்குவாரியிலிருந்து வெளியேறும் கரும்புகை, கழிவுகளால் சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அனுமதியின்றி சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் கல்குவாரியை செயல்பட அனுமதிக்கக் கூடாது.

மேலும் நாள்தோறும் 20க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான கற்களை 24 மணி நேரமும் எடுத்துச் சென்று அப்பகுதியின் கனிமவளத்திற்கு இழப்பை ஏற்படுத்த காரணமாக உள்ள தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியை மக்கள் குடியிருப்புப் பகுதியில் செயல்படுவதற்கு தடை விதித்து மக்களுக்கு பாதிப்பில்லாத பகுதிக்கு இடம் மாற்றிட வேண்டும். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்” என்று கூறினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.