ETV Bharat / briefs

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி! - Chennai district

சென்னை: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி இழப்பீடு வழங்கக்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Chennai High court
Chennai High court
author img

By

Published : Jun 10, 2020, 4:01 PM IST

தேசிய மக்கள் சக்தி கட்சியின் வர்த்தகப் பிரிவு செயலாளர் தனசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், ”கரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 18ஆம் தேதிக்குப் பின், தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அது சமயம் மார்ச் 25ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரையிலான 54 நாள்களில் சொந்தத் தொழில்புரிபவர்கள், சிறு, குறு தொழில்கள் மேற்கொள்பவர்கள், தினக்கூலிகள், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

மேலும், பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள பேரிடர் நிதியத்தின் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதை இம்மனுவில் சுட்டிக் காட்டியுள்ளேன். கரோனா தொற்று பரவல் தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளதால், பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 60 ரூபாயும், குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 45 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்க வேண்டும்

அந்த வகையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு 54 நாள்களுக்கு, 3 ஆயிரத்து 240 ரூபாயும், குழந்தைகளுக்கு 2 ஆயிரத்து 430 ரூபாயும் வழங்க வேண்டும். ஆனால், மத்திய அரசு ஜன்தன் வங்கிக் கணக்கில் 500 ரூபாயும், மாநில அரசு 1,000 ரூபாயும் மட்டுமே வழங்கியுள்ளன.

பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி, வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், இந்தத் தொகையில் 50 விழுக்காட்டை உடனடியாக வழங்க இடைக்கால உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போதுமான ஆதாரங்கள் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், போதிய ஆதாரங்களுடன் வழக்கு தொடர மனுதாரர் தரப்புக்கு அனுமதியளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.