தமிழ்நாட்டில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டேசெல்கிறது.
குறிப்பாக, சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையார் போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.
இந்தத் தொற்றுப் பரவலைக் குறைப்பதற்கு அப்பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள், மக்களுக்குத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அண்ணா நகர், கோடம்பாக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இரண்டு மண்டலங்களில், ராயபுரத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதைத்தொடர்ந்து, தற்போது தேனாம்பேட்டையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தொற்று அதிகரித்து வந்தாலும் குணமடைந்தோரின் விழுக்காடு 92ஆக உள்ளது. சிகிச்சைப் பெற்று வருபவர்களில் விழுக்காடு 6 ஆக உள்ளது.
இதுவரையிலும் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 614 பேர் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 511 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 10 ஆயிரத்து 12 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மேலும் 3 ஆயிரத்து 91 பேர் இந்தத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
மண்டல வாரியான பாதிக்கப்பட்டவரின் பட்டியல்,
கோடம்பாக்கம் - 17,789 பேர்
அண்ணா நகர் - 17,688 பேர்
ராயபுரம் - 15,148 பேர்
தேனாம்பேட்டை - 15,038 பேர்
தண்டையார்பேட்டை - 12,979 பேர்
திரு.வி.க. நகர் - 12,067 பேர்
அடையாறு - 12,214 பேர்
வளசரவாக்கம் - 10,248 பேர்
அம்பத்தூர் - 11,108 பேர்
திருவொற்றியூர் - 4,904 பேர்
மாதவரம் - 5,632 பேர்
ஆலந்தூர் - 6,272 பேர்.
சோழிங்கநல்லூர் - 4,455 பேர்
பெருங்குடி - 5,426 பேர்
மணலி - 2,428 பேர்