ETV Bharat / briefs

மனைவியின் திருமணத்தை மீறிய உறவால் நடந்த கொலை - Virudhunagar Sivakasi

விருதுநகர்: சாத்தூர் அருகே படந்தால் கிராமத்தில் மனைவியின் திருமண உறவை மீறி இருந்த காதலனை அடித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

Murder case
Murder case
author img

By

Published : Jun 28, 2020, 4:57 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே துரைசாமிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் குமார்(28) மனைவி தனலட்சுமி (26). இவர் கணவரை விட்டுப் பிரிந்து படந்தால் கிராமத்தில் தனியாக வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார். சிவகாசி அருகே திருத்தங்கள் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (27) என்பவருக்கும் தனலட்சுமிக்கும் இடையே தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்கடந்த ஜூன் 24 ஆம் தேதி நள்ளிரவு தனலட்சுமி வீட்டிற்கு வந்த கணவர் விக்னேஷ் குமார் இருவரும் வீட்டில் தனிமையில் இருப்பதைப் பார்த்து வீட்டின் வெளியே இருந்த கல்லை எடுத்து சதீஷின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் விசாரணையில் தனலட்சுமி, நாங்கள் இருவரும் என் வீட்டில் இருக்கும்போது எனது கணவர் விக்னேஷ் குமார் வருவதைப் பார்த்து விட்டேன் உடனே கணவரிடம் சதீஷ் என்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சிப்பதாக கூறினேன். நான் காலை பிடித்துக்கொண்டேன் எனது கணவர் சதீஷை கல்லால் அடித்து கொலை செய்தார் என்றார்.

அதைத்தொடர்ந்து காவல் துறையினர் தனலட்சுமியை சிறையில் அடைத்தனர். தொடர் விசாரணைக்கு பின்பு சிவகாசியில் சுற்றித்திரிந்த விக்னேஷ் குமாரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்து சாத்தூர் டவுன் காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.