ETV Bharat / briefs

ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்க டெண்டர் அறிவிப்பு - எம்.பி வெங்கடேசன் கண்டனம்

மதுரை: ரயில்வேத் துறையை தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு தற்போது டெண்டர் அறிவித்துள்ளது. இதற்கு எதிராக மக்களும், ரயில்வே தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

venkatesan
venkatesan
author img

By

Published : Jul 2, 2020, 8:37 PM IST

Updated : Jul 2, 2020, 8:54 PM IST

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

151 பயணிகள் ரயில்கள், 109 வழித்தடங்களை தனியாருக்குவிட விண்ணப்பங்கள் கோரி ரயில்வே அமைச்சகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிதி ஆயோக் அறிவித்த அதே வழித்தடங்களில், இந்த 151 ரயில்கள் தனியாருக்கு விடப்படும். 35 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு லைசென்ஸ் தரப்படும். அவர்களே கட்டணங்களை நிர்ணயித்துக்கொள்ளலாம். டிரைவரும் கார்டும் மட்டும் ரயில்வே ஊழியர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் தனியார் ஊழியர்களாக இருப்பார்கள். காலப்போக்கில் இவர்களும் தனியார் ஊழியர்களாக மாற்றப்படுவார்கள்.

இந்த வண்டிகள் நவீன தொடர் வண்டிகளாக இருக்கும். 16 கோச்சுடன், 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த வண்டிகள் சாதாரண மக்களுக்கான வண்டிகளாக இருக்கப்போவதில்லை. இப்போது எல்லா வண்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தனியாருக்கு அவர்களுக்கு விருப்பமான நேரத்தில் வண்டிகள் ஓட்டிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். கரோனா தொற்றை ஒட்டி ஏற்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள ரயில்வே அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்திய ரயில்வேயின் லட்சியங்களில் அதாவது வேகமான, பாதுகாப்பான, கட்டுப்படியான ரயில்கள் என்ற லட்சியம் தூக்கி எறியப்படுகிறது. 151 ரயில்களில் தெற்கு ரயில்வேக்கு பதினோரு ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, பெங்களூரு என ஐந்து ரயில்கள் தனியாருக்கு ஒதுக்கப்படும்.

இதன்மூலம் தாம்பரம் முனையம் தனியார் முனையமாக மாறிவிடும். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆறு ரயில்கள் தனியாருக்கு விடப்படும். கோயம்புத்தூர், ஹைதராபாத், மும்பை, ஹவுரா, டெல்லி, ஜோத்பூர் ஆகிய இடங்களுக்கு தனியார் ரயில்கள் விடப்படும். தனியாருக்கு வசதியான நேரம் ஒதுக்கப்படும். அவர்கள் எல்லா வண்டிகளையும் உயர்வகுப்பு வண்டிகளாக மாற்றிக்கொள்வார்கள். கட்டணங்களும் கடுமையாக இருக்கும். ஆனால், மக்களுக்கு வேறு வழிஇல்லை என்கிற நிலைமையை உருவாக்கி, அவர்கள் இந்த வண்டிகளில் பயணித்து தனியாருக்கு லாபம் ஏற்படுத்திக்கொடுக்க ரயில்வே வழிவகுக்கும்.

இந்த தனியார்மயம் ஏழை மக்களை மிகவும் பாதிக்கும், அத்துடன் ஏற்கனவே நிதியமைச்சகம் உருவாக்கியுள்ள அடிப்படை கட்டமைப்பு திட்ட பாதை என்ற திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி 2025இல் 500 தனியார் வண்டிகளை ஓட்ட அரசு முடிவெடுத்துள்ளது.

அதேபோல 750 ரயில் நிலையங்களில் 30 விழுக்காடு ரயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அந்தத் திட்டத்தில் உள்ளது. இவை அனைத்தும் அமல்படுத்தப்படும் என்பது இப்போது உறுதியாகி உள்ளது. மற்ற பொதுத் துறைகளை வேகமாக தனியார்மயமாக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இது இருக்கிறது. இதற்கெதிராக மக்களும், ரயில்வே தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஊரடங்கை உபயோகமாக்கிய இந்தியன் ரயில்வே

Last Updated : Jul 2, 2020, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.