கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சில தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறி பெற்றோர்களை தொல்லை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுகிறது.
இந்நிலையில், ஊரடங்கின்போது கல்வி கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்வி அலுவலகம் முன்பு குழந்தைகளின் உண்டியலை உடைத்து, கல்வி கட்டணம் கேட்கும் தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு கொடுக்குமாறு" மனு அளித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பணம் கேட்டு தொல்லை செய்யும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.