ETV Bharat / briefs

ஊரடங்கு மீறல்: சுமார் 17 கோடி ரூபாய் அபராதம் வசூல்!

சென்னை: ஊரடங்கை மீறியதாக கடந்த 111 நாள்களில் அபராதமாக 17 கோடியே 90 லட்சத்து 4 ஆயிரத்து 526 ரூபாய் வசூலித்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

Curfew Violation Fines Collected In TamilNadu

author img

By

Published : Jul 13, 2020, 3:19 PM IST

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. அதனடிப்படையில், காவல் துறையினர் தடை உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்து அவர்களைக் கட்டுப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 111 நாள்களில் தமிழ்நாடு காவல் துறை தடையை மீறியதாக 8 லட்சத்து 47 ஆயிரத்து 574 பேரைக் கைதுசெய்து ஜாமினில் விடுவித்துள்ளது.

மேலும் 6 லட்சத்து 33 ஆயிரத்து 555 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 17 கோடியே 90 லட்சத்து 4 ஆயிரத்து 526 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்னும் சில நாள்களுக்கு பொதுப் போக்குவரத்து செயல்படாது' - அமைச்சர் காமராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.