கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவாமல் தடுக்கும்வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 84 நாள்களில் தமிழ்நாடு காவல் துறை தடையை மீறியதாக ஆறு லட்சத்து 45 ஆயிரத்து 233 பேரைக் கைதுசெய்து பிணையில் விடுவித்துள்ளது.
மேலும், நான்கு லட்சத்து 74 ஆயிரத்து 87 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. 12 கோடியே 87 லட்சத்து 15 ஆயிரத்து 974 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.