ETV Bharat / briefs

தமிழர் விடுதலைக் களம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Nov 23, 2020, 10:00 PM IST

தென்காசி: தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட தாமதப்படுத்திவரும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து தமிழர் விடுதலைக் களம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tamilar Viduthalai Kalam State President Rajkumar Press Meet

தென்காசி மாவட்டம், புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழர் விடுதலைக் களம் கட்சி சார்பில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையான குடும்பன், மூப்பன், பண்ணாடி, காலாடி உள்ளிட்ட ஏழு உள்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை அறிவிக்க தாமதப்படுத்தும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து மாவட்ட செயலாளர் கட்டபொம்மன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அக்கட்சியின் மாநில தலைவர் ராஜ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "தொடர்ந்து அதிமுக ஒவ்வொரு தேர்தலின் போது தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி தருவதாகக் கூறி ஏமாற்றி வருகிறது.

வருகின்ற தேர்தலுக்கு முன்னதாகவே தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடவில்லை எனில் அதிமுகவை புறக்கணித்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தரும் கட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்போம்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.