நேற்று(ஜூன் 22) காலை 10.22 முதல் நண்பகல் 1.32 வரை கங்கணசூரிய கிரகணம் நடைபெற்றது.
கிரகணம் நடைபெறும்போது, 12 மணியளவில், கிரகண மத்திய கால புண்ணிய தீர்த்தவாரி நடைபெறுவது தீமைகளை விலக்கும் என்பது ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது.
இதனையொட்டி, நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள புகழ்பெற்ற மயூரநாதர் கோயிலில் தீர்த்தவாரி, ஆலய தெப்பக்குளமான பிரம்ம தீர்த்தத்தில் நடைபெற்றது.
அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திரவியப்பொடி, கடதீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, தீர்த்தவாரி நடைபெற்றது. ஊரடங்கால் பக்தர்கள் இன்றி, ஆலய அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று அபிஷேக, ஆராதனைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதையும் படிங்க: ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் நாகையில் கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு!