ETV Bharat / briefs

மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுதலாம் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

திருப்பூர்: மாவட்டத்தில் 349 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
author img

By

Published : Jun 9, 2020, 2:00 AM IST

பத்தாம் வகுப்பு தேர்வு 15ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ள நிலையில் திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் மற்றும் முகக்கவசங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திருப்பூர் மாவட்டத்தில் 349 தேர்வு மையங்களில் 29 ஆயிரத்து 746 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். அச்சமின்றி தேர்வு எழுத அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேர்வு அறைகளில் காலை மதியம் என இரு நேரங்களில் கிருமி நாசினி தெளிக்கவும், மாணவர்கள் தேர்வு எழுதும் முன் கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளவும் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வெளிமாவட்ட, வெளிமாநில மாணவ-மாணவிகள் அந்தந்த தேர்வு மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதவும் தேவையான வாகன ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.

இதற்கிடையே, சென்னை சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 22 பேர் திருப்பூரில் இருந்த நிலையில் அவர்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு சென்னைக்கு 8, தஞ்சைக்கு இரண்டு, தருமபுரிக்கு 4, சேலத்திற்கு 4, திருவள்ளூருக்கு 4 பேர் என மொத்தம் 22 மாணவ மாணவிகள் அவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு தேவையான உணவு தண்ணீர் உள்ளிட்ட வசதிகளுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.