தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக பொது முடக்கத்தால் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில், நாளை முதல் பல்வேறு தளர்வுகளுடன் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததையடுத்து கடந்த 5 மாதங்களாக தடுப்புகளால் அடைக்கப்பட்டிருந்த பூந்தமல்லி பேருந்து நிலையம் தற்போது தடுப்புகள் முழுவதும் எடுக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்திற்குள் இருக்கும் குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டு பேருந்து நிறுத்தும் இடங்கள், கடைகள் என அனைத்து இடங்களிலும் வாகனங்கள் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியிலும் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 5 மாதங்களுக்குப் பிறகு பேருந்து நிலையம் திறக்கப்படுவதால் இங்குள்ள கழிவறைகள் சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.