உலகையே உலுக்கி வரும் கரோனா தொற்று தற்போது உச்சகட்ட பாதிப்பை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி அரசுப் பணியில் உள்ள மருத்துவர், செவிலியர், காவலர்கள், அரசு அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையினர் அதிக அளவில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகினர். இதில், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், ஆறு காவலர்கள் என மொத்தம் 8 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
அதில், நேற்று (ஜூலை27) ஐந்து பேரும், இன்று மூன்று பேரும் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து பணிக்கு திரும்பினார். இவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா சான்றிதழ், பழங்கள் வழங்கி வரவேற்றார்.
மேலும் அங்கிருந்த காவல்துறையினர் கரோனாவில் இருந்து மீண்டு பணிக்குத் திரும்பிய சக காவலர்களை மலர் தூவி வரவேற்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு