ETV Bharat / briefs

உலகக் கோப்பை: ஆஸி. அணியில் இருந்து ஜை ரிச்சர்ட்சன் விலகல் - ஜை ரிச்சர்ட்சன்

காயம் காரணமாக உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில்  இருந்து ஜை ரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.

உலகக் கோப்பை: ஜை ரிச்சர்ட்சன் விலகல்
author img

By

Published : May 8, 2019, 7:11 PM IST

12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில், மே 30 முதல் ஜூலை 14 வரை நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களின் பட்டியலை, கடந்த மாதமே அறிவித்தன. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியில் வலது கை வேகப்பந்துவீச்சாளர் ஜை ரிச்சர்டன் இடம்பெற்று இருந்தார். சமீபத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு இருந்தது.

jhye richardson
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது காயம் அடைந்த ஜை ரிச்சர்ட்சன்

இந்நிலையில், காயத்தில் இருந்து மீண்டு வர இயலாத காரணத்தினால் அவர் தற்போது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு இடது கை வேகப்பந்துவீச்சாளரான கேன் ரிச்சர்ட்சன் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக 12 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஜை ரிச்சர்ட்சன் 24 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

kane richardson
கேன் ரிச்சர்ட்சன்

இதைத்தொடர்ந்து, உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி ஜூன் 1ஆம் தேதி பிரிஸ்டோல் நகரில் நடைபெறவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.