சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "ஜூலை மாத இறுதியில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு எடுத்துள்ளது.
மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே தேர்வெழுதும் வகையில், இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் சரியான விடைகளைத் தேர்ந்து எடுப்பது (objective type), போன்ற கேள்வி முறையில் தேர்வு நடைபெறும்.
வழக்கமாக நடக்கும் 3 மணி நேர தேர்வுக்கான கால அளவு குறைக்கப்படும். முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கவில்லை.
முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறை தேர்வு இல்லை. கரோனா தீவிரம் குறைந்தால் அரசின் ஒப்புதல் பெற்று, அவர்களுக்கு நேரடியாக தேர்வுகள் நடத்தப்படும்" என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.