தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையை கருத்தில் கொண்டு ஒருசில கடைகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கடை வீதிகளில் துணை ஆட்சியர் அனுஸ்ரீ இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்ட துணிக்கடை, மளிகைக்கடை, பாத்திரக்கடை, உணவகம் உள்ளிட்ட ஏழு கடைகளுக்கு சீல் வைக்க சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் சீல் வைக்கப்பட்ட கடைகள் மூன்று நாள்களுக்குத் திறக்கக் கூடாது எனவும் அவர் உத்தரவிட்டார்.