ETV Bharat / briefs

கடல் பசுக்களை பாதுகாக்க கோரிய வழக்கு: மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

மதுரை: கடல் பசுக்களை பாதுகாக்க இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் பரிந்துரையை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

High Court Madurai Branch
High Court Madurai Branch
author img

By

Published : Jul 31, 2020, 9:07 PM IST

மதுரையை சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “தமிழநாட்டில் கடல் பசு ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக குறைந்த அளவில் மட்டுமே காணப்படுகிறது. இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் இணைய தளத்தில் இந்தியாவில் 200 கடல் பசு மட்டுமே உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் பசுக்கள் கடலில் உள்ள புற்களை மட்டுமே உணவாக உற்கொள்ளும். ஆனால் சில ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் மீன்பிடிக்கு செல்லும் போது இரட்டை வடி வலையை பயன்படுத்துவதால் ஆழ்கடலில் உள்ள புற்களை அழிந்துவிடுகிறது.

இதனால், கடல் பசுக்கள் உணவின்றி உயிரிழந்துவிடும் அபாயம் உள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத்தில் மட்டுமே கடல் பசுக்கள் உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்று முதல் நான்கு வயதான கடல் பசு உடல் மற்றும் கண்ணில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாட்டில் அதிராமப்பட்டினம் முதல் அம்மாபட்டினம் வரை கடல்பசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பரிந்துரை செய்ப்பட்டது.

இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே கடல் பசுக்களை பாதுகாக்க இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் பரிந்துரையை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயனன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆழ்கடல் பகுதியில் இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இரட்டை மடி வலையை மீனவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இதைத் தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வழக்கு தொடர்பாக இந்திய வனவிலங்கு நிறுவனத்தை எதிர் மனுதாரராக சேர்த்து, மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.