2019ஆம் ஆண்டுக்கான ஆசிய ஸ்குவாஷ் சாம்பியின்ஷிப் தொடர் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில், இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, சக நாட்டைச் சேர்ந்த தன்வி கன்னாவிடன் மோதினார்.
இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஷ்னா 12-10, 12-11,11-7 என்ற நேர் செட் கணக்கில் போராடி வெற்றிபெற்று, அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இதைத்தொடர்ந்து, ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சவுரவ் கோஷல், 11-4, 11-4,11-3 என்ற நேர் செட் கணக்கில், மலேசியாவின் முகமது நிஃபிஸ்வான் அட்னனை தோற்கடித்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.