ETV Bharat / briefs

ஆரோக்கியத்தை பாதுகாக்க புது இயக்கம் ஆரம்பிக்கும் சத்யராஜின் மகள்!

வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சத்யராஜின் மகள் திவ்யா புதிய இயக்கம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Divya sathyaraj
Divya sathyaraj
author img

By

Published : Jun 26, 2020, 7:38 PM IST

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர். இவர் உலகின் மிகப்பெரிய உணவுத் திட்டமான அக்‌ஷய பாத்திராவின் விளம்பரத் தூதராக உள்ள இவர் பல்வேறு சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்துவருகிறார்.

இந்நிலையில், திவ்யா ஊட்டச்சத்து துறையில் செய்த சேவைகளை அங்கீகரித்து அமெரிக்காவின் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதற்காக அமெரிக்காவில் நடைபெறவிருந்த விழா கோவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திவ்யா கூறுகையில், "அமெரிக்க சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெறுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

நான் பெரிய புத்திசாலி மாணவி இல்லை. ஆனால், கடினமாக உழைக்கக்கூடிய ஒரு உழைப்பாளி. அறிவாளியாக இருப்பதைவிட உழைப்பாளியாக இருப்பதுதான் சிறந்தது என்று அப்பா கூறுவார். தற்போது நாட்டில் நிலவும் கரோனா தொற்று பரவலிலிருந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

நோய் எதிர்ப்புச் சக்தியை உற்பத்தியாகும் உணவு வகைகள் மக்களுக்கு அதிக அளவில் கொடுக்க வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக மிக விரைவில் ஒரு புதிய இயக்கம் ஆரம்பிக்க உள்ளேன்" என்று கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.