மாடலிங் துறை மாணவரும், நடிகை சமந்தாவின் தோழியுமானவர் ஷில்பா ரெட்டி. இவர், எனக்கும் எனது கணவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்டது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர், "கரோனா தொற்று அறிகுறி இல்லாமல் வந்திருக்கிறது. இப்போது ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சி செய்து போராடி வருகிறோம். அனைவரும் ஊட்டச்சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.