ETV Bharat / briefs

ரூ.4.60 லட்சம் திருட்டு: குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினருக்குப் பாராட்டு! - Money theft

திருவாரூர்: மன்னார்குடியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற ஆந்திர மாநிலத்தவர்களை 12 மணி நேரத்தில் கைது செய்த காவல் துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Rs 4.60 lakh theft: SP Praise the police who arrested the culprits in 12 hours

author img

By

Published : Apr 23, 2021, 3:48 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஆதிச்சபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (45) இவர் நீடாமங்கலம் அருகேவுள்ள கற்கோவில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சொந்த வீடு கட்டுவதற்காக
மன்னார்குடி கடைவீதியில் இயங்கி வரும் பரோடா வங்கியிலிருந்து கடனாக 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி அதனை தனது இருசக்கர வாகனத்தில் வைத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கண்ணனை திசை திருப்பி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை திருடிச் சென்றார். இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி கயல்விழி உத்தரவின்பேரில் தனிப்படை காவல் துறையினர் வங்கியிலிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வேளாங்கண்ணியில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பனானா பரசாங், மேக்கல பிரசன்னகுமார், மேக்கல பிரவீன்குமார், உதயகரன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து , அவர்களிடமிருந்து 4 லட்சத்து 60-ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர், பணத்தை இழந்த கண்ணன், அவரது குடும்பத்தினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து திருடர்களிடமிருந்து மீட்கப்பட்ட பணத்தை அவரது குடும்பத்தாரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கையல்விழி வழங்கினார். மேலும், திருட்டு சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த தனிப்படை காவல் துறையினரை காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.