அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரப்புரையின் போது, சில தன்னுரிமை பெறாத பாடல்களை பயன்படுத்தியது அம்பலமானது. ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ எனும் இசை நிறுவனம் இது தொடர்பான புகார்களை டிரம்பின் மீது அடுக்கியது.
மேலும், தங்களின் பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதால், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளுக்கு அதிபர் டிரம்ப் உட்பட வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளனர். ரோலிங் ஸ்டோன்சின் பிரபலமான ‘யூ காண்ட் ஆல்வேஸ் கெட் வாட் யூ வாண்ட்’ பாடலை டிரம்ப் தனது பரப்புரைகளில் அதிகமுறை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஓக்லஹோமாவின் துல்சாவில் நடைபெற்ற ஒரு நிகழ்விலும் இந்த பாடல் ஒலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.