ETV Bharat / briefs

கடலூரில் தற்கொலை செய்துகொண்ட மீனவர்:  நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல்

கடலூர்: தேவனாம்பட்டினத்தில் மீனவர் தற்கொலை செய்துகொண்டதால் உறவினர்கள் நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூரில் தற்கொலை செய்துகொண்ட மீனவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி சாலை மறியல்

author img

By

Published : Sep 21, 2020, 3:52 PM IST

தமிழ்நாட்டில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

கடலூர் தேவனாம்பட்டினம் சின்னப்ப செட்டி தெருவைச் சேர்ந்த சங்கர் (39) சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்து வந்தார்.

இந்நிலையில் சுருக்கு மடி வலைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளதால் வேலை இன்றி தவித்து வந்த சங்கர் தற்கொலை செய்துகொண்டார்.

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் . இறந்த சங்கரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரியும் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கோரியும் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக தீர்வு காண ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்துசென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.