ETV Bharat / briefs

தாயகம் திரும்பிய தமிழர்கள் - திறன் பயிற்சிக்கு பதிவு செய்ய விவரம் வெளியீடு - தாயகம் திரும்பிய தமிழர்கள்

சென்னை: தாயகம் திரும்பிய தமிழர்கள் திறன் பயிற்சிக்கு பதிவு செய்யவேண்டிய விவரங்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் விஷ்ணு வெளியிட்டுள்ளார்.

தாயகம் திரும்பிய தமிழர்கள் - திறன் பயிற்சிக்கு பதிவு செய்ய விவரம் வெளியீடு

author img

By

Published : Jun 10, 2020, 3:12 PM IST

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமானது, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களது திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு குறுகிய கால திறன் பயிற்சிகளை அளித்து அவர்களது வேலைபெறும் திறனை அதிகரித்து அதன் மூலம் தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்று வழங்கும் சேவையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தற்போது கரோனா நோய்த் தொற்று உலகளவில் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து தமிழர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். அவர்களது வேலைத்திறன் மற்றும் முன் அனுபவங்களை கண்டறிந்து தகுதிக்கேற்ப தனியார் துறைகளில் பணிவாய்ப்பை பெற உதவுவதற்கும், திறன் பயிற்சி தேவைப்படும் நேர்வுகளில் அவர்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்கி தனியார் துறை நிறுவனங்களில் பணி வாய்ப்பை பெற உதவுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டு வருகின்றது.

வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் தாங்கள் விரும்பும் திறன் பயிற்சி மற்றும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பை பெற உதவுவதற்கென, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் இணையதளத்தில் (https://www.tnskill.tn.gov.in) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளப்பக்கத்தில் பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்தகவலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர்
விஷ்ணு தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.