ETV Bharat / briefs

மனைவியை அடித்துக் கொலைசெய்த கணவர் தற்கொலை! - மனைவியை கொன்ற கணவர் தற்கொலை

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் தனது மனைவியை அடித்துக் கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

மனைவியை கொன்ற கணவர் தற்கொலை
Husband suicide after killed his wife in kerala
author img

By

Published : Jun 13, 2020, 2:12 PM IST

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் பொன்னன் (68). இவரது மனைவி ஓய்வுபெற்ற தலைமைக் காவலர் லீலா (72). இவர்களுக்குள் சொத்து தகராறு இருந்துவந்துள்ளது. இதனால், இருவரும் தனித்தனி வீட்டில் வசித்துவந்தனர்.

இந்நிலையில், இன்று பொன்னனுக்கும் அவரது மனைவி லீலாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவர் லீலாவைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் லீலாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையே கணவர் பொன்னன் தனது வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த லீலா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம், குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தம்பதியினரின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.