ஈரோடு மாவட்டம், அந்தியூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக வெயில் வாட்டி வதைத்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால், விவசாய நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன. இதனால், பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவந்தது.
இந்நிலையில், நேற்று மாலை அந்தியூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. கோடை வெப்பம் தணிந்ததுடன் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த கன மழையின் காரணமாக அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.