டீசல் என்ஜின்களை மின்சார என்ஜின்களாக மாற்றுவதற்கான திட்டத்தை மறு மதிப்பீடு செய்ய இந்திய ரயில்வே உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ், "ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ள பழைமையான இயந்திரங்களை கையாள்வதற்கான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இது சிறந்த வழியாகும்.
மேலும், மாற்று நடவடிக்கை மின்சார இழுவைக்கு மாற்றுவதற்கான ரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதன் பசுமை முயற்சியின் ஒரு பகுதியாக, ரயில்வே 505 ஜோடி ரயில்களை ஹெட் ஆன் ஜெனரேஷனாக மாற்றியுள்ளது.
ஆண்டுக்கு ரூ.450 கோடி செலவில் சுமார் 70 மில்லியன் லிட்டர் டீசலை சேமிக்கும் திறன் உள்ளது. உலகின் முதல் டீசல் மாற்றப்பட்ட லோகோமோட்டிவ், வாரணாசியில் இருந்து முதல் மாற்றப்பட்ட என்ஜின் 2019 பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது” என்றார்.
மேலும், “டீசல் என்ஜின்களைப் பயன்படுத்தும் அண்டை நாடுகளுக்கு இந்த இயந்திரங்களை ஏற்றுமதி செய்வதற்கும் ரயில்வே ஆலோசித்து வருகிறது” என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: விதிகளை மீறி இயங்கிய இறைச்சி கடைகளுக்கு சீல்!