இந்திய ரயில்வேயின் தலைமையகமான ரயில் பவன் அலுவலகத்தில் ஜூலை 9, 10, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிறப்பு பரிசோதனை முகாமில் அலுவலர்கள் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ரயில் பவனில் உள்ள அனைத்து அலுவலகங்களையும் ஜூலை 14, 15 ஆகிய தேதிகளில் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நாள்களில், அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என்றும், மேலும் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. அலுவலகத்தில் அவசர வேலைக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.