ETV Bharat / briefs

விவசாயிகளுக்கு விதைப்பொருள்கள் வழங்கும் விழா - ஈரோடு ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

ஈரோடு: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை ஒட்டி கரோனா நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விதைப்பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விவசாயிகளுக்கு விதைப்பொருட்கள் வழங்கும் விழா

author img

By

Published : Jun 20, 2020, 10:43 AM IST

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நடைபெற்றது.

விழா தொடங்கும் முன்னதாக இந்திய எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தற்போது கரோனா நோயின் தாக்கத்தால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஒருபுறம், நோய்த்தொற்று ஒருபுறம், வேலையின்மை ஒருபுறம் என அனைத்து தரப்பினரையும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50ஆவது பிறந்தநாள் வழக்கமான விழாவாக இல்லாமல் இந்தாண்டு கரோனாவால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ள விவசாயிகளுக்கு உதவிடும் நோக்கில் விவசாயிகளின் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி நேற்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் தெற்கு மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியின் தொடக்கமாக அலுவலகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மேலும் விவசாயிகளுக்கு விதைப்பொருள்கள் வழங்கும் விழா, 15 குளங்களைச் சுற்றி பனை மரம் வளர்க்கும் விதத்தில் மூவாயிரம் பனங்கொட்டைகள் நடும் தொடக்க நிகழ்வும் நடைபெற்றது. பின்னர், இவ்விழாவில் நலிந்த பொதுமக்களுக்கு அரிசி, போர்வைகள் வழங்கப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.