அரியலூர் மாவட்டத்திலுள்ள 16 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்கள், குழந்தைகளுக்கு மீதான புகார்களை உடனடியாக ஆய்வு செய்யவும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் செல்வதற்காகவும் ரேஸ் என்ற தனிப் பிரிவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
ஒவ்வொறு காவல் நிலையத்திற்கும் தலா ஒரு இருசக்கர வாகனம் என 16 இருசக்கர வாகனங்கள் கொடுக்கப்பட்டு, அதில் 8 மணி நேரம் வேலை நேரமாக பிரித்து மூன்று காவலர்கள், மூன்று யூ பிரிவு படையினர் சுழற்சி முறையில் பணியாற்றவுள்ளனர். இவர்கள் வேறு பணிகள் எதுவும் செய்யாமல் 100 என்ற எண்ணுக்கு வரும் அழைப்புகள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் ஆகியவற்றை மேற்கொள்ளப்படுகின்றனர்.
இதன் மூலம் உடனடியாக காவல் நிலைய காவலர்கள் அங்கு சென்று உதவிகளை செய்ய ஏதுவாக இருக்கும் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.