சிறப்பு சிகிச்சை வார்டு அமைந்துள்ள வளாகத்தில் அலட்சியமாக வீசப்படும் மருத்துவக் கழிவுகளால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
மேலும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை வார்டானது, பொது வார்டுக்கு அருகாமையில் இருப்பதால் அந்தப் பாதையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் நோய் பரவும் சூழல் நிலவுகிறது.
நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இது போன்று மருத்துவக் கழிவுகளை அலட்சியமாக பொது வெளியில் வீசி விட்டு செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தயங்காமல் பிளாஸ்மா தானம் செய்வோம்! சக உயிர்களைக் காப்போம்! - முதலமைச்சர்