ETV Bharat / briefs

அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - உயர் நீதிமன்றம் - தமிழ்நாடு நர்சரி, தொடக்கப்பள்ளி, மெட்ரிகுலேஷன், மேல் நிலைப் பள்ளிகள் சங்கம்

சென்னை: 40 % அதிகமாக கல்விக் கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன ? - நீதிமன்றம் கேள்வி

author img

By

Published : Aug 31, 2020, 9:14 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து கல்வி நிறுவனங்கள் சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளிகள் இந்தாண்டு 75% கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் இறுதிக்குள் 40% கட்டணமும், மீதமுள்ள தொகையை பள்ளிகள் திறந்த பின் வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மீறும் பள்ளிகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி கல்விக் கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது.

இதனையடுத்து, தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை தளர்த்தக் கோரி தமிழ்நாடு நர்சரி, தொடக்கப்பள்ளி, மெட்ரிகுலேஷன், மேல் நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிபதி, கல்வி நிறுவனங்கள் 40 சதவீத கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது குறித்து கண்டனம் தெரிவித்தார்.

அத்துடன், 40 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டணம் வசூலித்த பள்ளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 7ஆம் தேதியன்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை செயலாளர், சி.பி.எஸ்.இ.மண்டல இயக்குநர் ஆகிய இருவரும் காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.