ETV Bharat / briefs

ஊழியர்களுக்கு கரோனா தொற்று தனியார் மருத்துவமனைகள் மூடல்

சேலம்: மருத்துவமனை ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் சேலத்தில் இரண்டு பிரபல தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டன.

ஊழியர்களுக்கு கரோனா தொற்று தனியார் மருத்துவமனைகள் மூடல்
ஊழியர்களுக்கு கரோனா தொற்று தனியார் மருத்துவமனைகள் மூடல்
author img

By

Published : Jul 22, 2020, 3:26 PM IST

சேலம் காந்திரோடு பகுதியில் பல்வேறு சிகிச்சைகள் மற்றும் மகப்பேறு சிகிச்சைகள் அளிக்கப்படும் பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் 8 செவிலியர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது .

இதனையடுத்து அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் . அவர்கள் பணிபுரிந்த மருத்துவமனை முழுவதும் மாநகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்து மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்

இதேபோல இரண்டு நாட்களுக்கு முன்பு சேலம் அம்மாபேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு கரோனோ தொற்று ஏற்பட்டதால் மூடப்பட்டது. சேலத்தில் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகள், கரோனா வைரஸ் காரணமாக சீல் வைக்கப்பட்டு வரும் சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.