தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டத்திலும் சிறப்பு அலுவலர்களை அரசு நியமித்துள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கரோனா சிகிச்சை வார்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் முனியநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மன்னம்பந்தல் தனியார் கல்லூரி, மகளிர் கல்லூரி உள்பட தனியார் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மையங்களை அவர் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து நகரில் மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் தகுந்த இடைவெளிகளை கடைப்பிடிக்கிறார்களா என்பதை ஆய்வு செய்தார். இதில், மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர் உள்ளிட்ட மாவட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.