விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்த கர்ப்பிணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் அவரை தனிமைப்படுத்தும் வகையில் அவருடன் இருந்த சக நோயாளிகளை வேறு வார்டுக்கு மாற்றியுள்ளனர். மேலும் அந்த வார்டை கரோனா வார்டாக மாற்றம் செய்துள்ளனர்.
இதேபோல், விருதுநகர் ஆயுதப்படையில் பணிபுரியும் மேலப்புதூரைச் சேர்ந்த மாரீஸ்வரி (24) என்ற பெண் காவலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே தனியார் மருத்துவமனை செவிலியர், லேப் டெக்னீசியன் போன்றோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைவருக்கும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் புதிய கரோனா வார்டில் சிகிச்சையளித்து வருகின்றனர்.