இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் சமீப காலமாக காவிரி உரிமைக்கான போராட்டம், விவசாயிகளுக்கான வாழ்வாதாரப் பிரச்னைகள் மீட்பு, தமிழ் மொழி கலாச்சாரத்தை சீரழிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், கல்வி மீது துவக்கப்படும் தாக்குதல்கள், கூட்டாட்சி தத்துவத்தை ஒடுக்க நினைப்பது, பொதுத் துறைகள் தனியாருக்கு தாரைவார்ப்பது போன்ற மக்கள் விரோத சட்டங்கள், கொள்கைகளுக்கு எதிரான அரசியல் ரீதியான போராட்டங்கள் தீவிரமடைந்துவருகிறது.
இதுகுறித்து மக்களின் எண்ணங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசின் கொள்கை நிலைகள் தெளிவுப்படுத்துவதற்கான சாதனமாக ஊடகங்கள் பெரும்பங்காற்றிவருகின்றனர். பாதிக்கப்படும் மக்களின் பேராயுதமாகவும் ஊடகங்கள் விளங்கிவருகின்றன.
இதனால் வெறுப்படைந்த சிலர் மக்கள் மத்தியில் ஜனநாயக அடிப்படையில் செயல்படும் சில தனியார் தொலைக்காட்சிகளின் நிர்வாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், முதன்மை செய்தியாளர்களுடைய ஊடக விமர்சனங்களை அரசியல், அறிவுப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள்.
ஊடக விமர்சனங்களுக்கு மக்கள் மதிப்பளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத சில அரசியல் இயக்கங்களின் பின்புலத்தோடு ஊடக விமர்சர்கள் மீது விமர்சனம் என்ற பெயரில் அச்சுறுத்தும் வகையிலும், கீழ் தரமான வகையில் செய்திகளை ஒரு சில நபர்கள் வெளியிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஊடகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஒட்டு மொத்த தமிழர்கள் மீது நடத்தப்படும் தக்குதல்கள் என்பதை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் உணர வேண்டும்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.