புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் பார்வையிட்டு, அங்கு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளையும், சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் ராவ், மாவட்ட ஆட்சியர் அருணை தொலைபேசி வாயிலாக தொடர்புக்கொண்டு பேசினார். அமைச்சரின் ஆய்வின் போது, சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், இந்திய இயன்முறை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு, மருந்தியல் துறைத் தலைவர் டாக்டர் ரமேஷ், மருத்துவக் கண்காணிப்பாளர் வாசுதேவன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.
புதுச்சேரியில் 127 கரோனா பாதிப்பாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.