ETV Bharat / briefs

தப்பியோடிய கரோனா பாதிப்பாளர் சிக்கினார்! - Police Rescue Corona Patient In Madurai

மதுரை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 67 வயது முதியவர், சிகிச்சையில் இருந்து தப்பிய நிலையில் காவல்துறையினர் மீட்டு மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர்.

Police Rescue Corona Patient In Madurai
Police Rescue Corona Patient In Madurai
author img

By

Published : Jun 18, 2020, 6:26 AM IST

மதுரை மாவட்டம், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவர், கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றிரவு தப்பி வந்து வீட்டில் பதுங்கிக் கொண்டார்.

இதையடுத்து, அவரை தேடி வீட்டிற்கு சென்ற காவல் துறையினர் அம்முதியவரை அழைத்து வர முயன்றனர். அப்போது, அவர் வர மறுத்து காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு பின் கரோனாவிற்கான சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கரோனா நோயாளி மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் 478 மருத்துவ முகாம்கள்...! - மாநகராட்சி ஆணையர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.