ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தங்கியிருக்கும் ஆதரவற்றோர்கள், சாலையோரம் வசிப்போர்கள் உணவின்றித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏழை எளியோர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷின் உத்தரவின்பேரில், கோபிசெட்டிபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் சோமசுந்தம் தலைமையில், உதவி ஆய்வாளர் பன்னீர்செல்லம், தலைமைக்காவலர் வெள்ளியங்கிரி, தனிப்பிரிவு அலுவலர், சுரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய காவல் துறை குழுவினர் பேருந்து நிலையம் கடைவீதி மொடச்சூர்சாலை வாரச்சந்தை வளாகம் உள்ளிட்ட இடங்களில் தங்கிருந்த ஆதரவற்றோர்கள், சாலையோர வசிப்பவர்கள், ஏழை எளியோர்கள் என உணவின்றித் தவித்தவர்களுக்கு உணவு பொட்டலங்களும், குடிநீர் பாட்டில்களும் வழங்கி அவர்களின் பசியாற்றினர்.
மேலும், முகக்கவசங்களை அணிவித்து கரோனா தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்கவும் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: கரோனாவை வென்று பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு சிறப்பு வரவேற்பு!