சென்னை அண்ணா நகரை அடுத்துள்ள எம்.ஜி.ஆர் காலனியில் மாலை 5.30 மணியளவில், அப்பகுதி மக்கள் சகஜமாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அங்கு நின்றிருந்த பெண் ஒருவர் மீது மோதுவது போல் வந்து நின்றது.
இதனால் அருகிலிருந்த பொதுமக்கள் அந்த காரில் இருந்த இரண்டு நபர்களை பார்த்து கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது, காருக்குள் இருந்த இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். கூட்டம் கூடியதைக் கண்ட அவர்கள் அங்கிருந்து உடனடியாக காரை எடுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் இரவு 7.30 மணியளவில் அதே பகுதிக்கு காரில் வந்த அந்த இரண்டு நபர்கள் கையில் கட்டை மற்றும் கத்தியை எடுத்து கொண்டு வந்து நின்றிருந்த 5க்கும் மேற்பட்ட பொதுமக்களை தலை மற்றும் கைகளில் தாக்கியுள்ளனர்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடியதால் காரை அங்கேயே விட்டு அந்த இரண்டு நபர்களும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : சிறைக்காவலில் மரணம்: ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு