தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவரும் கரோனா வைரசைக் (தீநுண்மி) கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. முகக்கவசம் அணியவும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் பலரும் அதைக் கடைப்பிடிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் வசிக்கும் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததால், துக்க வீட்டுக்கு ஒரே லாரியில் 82 பேர் சென்றுள்ளனர்.
இதையடுத்து சத்தியமங்கலம் மைசூரு சந்திப்பில் சென்றுகொண்டிருந்தபோது, லாரியை தடுத்து நிறுத்திய போக்குவரத்துக் காவல் துறையினர் சோதனைசெய்தனர்.
அப்போது அவர்கள் முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் பயணித்துவந்தது தெரியவந்தது. இதனையடுத்து கரோனா தடுப்பு விதியை மீறியதாகக் காவல் துறையினர் 82 பேர் மீது வழக்குப்பதிந்து ரூ.100 அபராதம் வசூலித்தது.