விருதுநகர்-சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விருதுநகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவபிரசாத், காவல் துறையினர் இன்று (ஜூன் 22) காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அதுசமயம் அவ்வழியாக குல்லூர் சந்தையிலிருந்து சாத்தூர் சென்றுகொண்டிருந்த மினி லாரியை தடுத்துநிறுத்தி சோதனைசெய்தனர். சோதனையில் வாகனத்தில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரிப்பதற்காக கருந்திரி எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஒண்டிப்புலி நாயக்கனூரைச் சேர்ந்த ஓட்டுநர் கருப்பையா, சீனிவாசன் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் இவர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 800 கட்டு கருந்திரி, அதனை ஏற்றிவந்த வாகனம் என அனைத்தும் பறிமுதல்செய்யப்பட்டன.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.