திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையராக உள்ள சரவணன் அவ்வப்போது பொதுமக்களுக்கு சமூக வலைதளம் மூலம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
குறிப்பாக சமூக வலைதளங்களில் பொதுமக்களை ஏமாற்றும் மோசடி கும்பல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கும் படி எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
இந்தச் சூழ்நிலையில் தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் அனைவரும் செல்போனில் மூழ்கியுள்ளதால், இ-மெயில்கள் மூலம் பலர் ஏமாற்றப்படுவதாக காவல் துணை ஆணையர் சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், "கரோனா காலத்தில் அனைவரும் செல்போனில் மூழ்கியுள்ளனர். கீழ்க்காணும் போலி இ மெயில்கள் மீண்டும் வலம் வரத் தொடங்கியுள்ளது.
இவை 100 சதவீதம் போலியானவை, மோசடியானது கவனமாக இல்லாவிட்டால் உங்கள் பணத்தை இழக்க நேரிடும். அமெரிக்காவில் இதுபோன்ற ஏழைகளை இல்லையா?"என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது அமெரிக்காவைச் சேர்ந்த கிரேஸ் என்ற நபர் இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு பணம் தருவதாக குறுந்தகவல் வெளியிட்டு அதில் தனது இ மெயில் முகவரியை குறிப்பிட்டுள்ளார். அந்த குறுந்தகவலை அடிப்படையாக வைத்து துணை ஆணையர் சரவணன் இந்த அறிவுறுத்தலை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கடன் உதவி நிராகரிப்பால் இளைஞர் நூதனப் போராட்டம்!