திருவள்ளூரை அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் டேபிள், சேர் மற்றும் அலுவலக அலமாரிகள் ஆகியவற்றை செய்யும் தொழிற்சாலை கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்தத் தொழிற்சாலையில் 170 நிரந்தர தொழிலாளர்களும் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து நிறுவனம் கடந்த ஐந்தாம் தேதி முதல் 30 விழுக்காடு பணியாளர்களை வேலைக்கு வர அறிவுறுத்தியுள்ளது.
எனினும் அரசு வழிகாட்டுதலின்படி வேலை, போக்குவரத்து, உணவு, பாதுகாப்பு வசதி போன்றவற்றை கடைபிடிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் 14 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து தொழிற்சாலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது .
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் உதவியுடன் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: 'மக்கள் இயக்கமாகச் செயல்பட்டால் மட்டுமே கரோனாவை ஒழிக்க முடியும்' - ராமதாஸ்