திருவள்ளூர் மாவட்டம், பி8 புல்லரம்பாக்கம் காவல் நிலையம் கடந்த 60 ஆண்டுகளாக கிராமத்தினர், பெண்களுக்குப் பாதுகாப்பாக விளங்கிவருகிறது. இந்நிலையில், காவல் நிலையத்தை இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடமாற்றம் செய்யும் ஏற்பாட்டினைக் கைவிடுமாறும் காவல் நிலையத்திற்குத் தேவையான இடத்தை ஊராட்சி சார்பில் ஒதுக்கித்தர ஊராட்சி நிர்வாகம் தயாராக உள்ளதாகவும் அரசு நடவடிக்கை எடுத்து காவல் நிலையத்தை இடமாற்றம் செய்யும் உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கைவைத்தனர்.
இந்நிகழ்வின்போது, புல்லரம்பாக்கம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பேபி மனோகர், ரவி, முனிரத்தினம், செஞ்சுவீரன், சுரேஷ், டில்லி, தாமோதரன், தமிழ்புதல்வன், தமிழரசன், குட்டிதாஸ், மணிமேகலை, சுசிலாபாபு, முரளி, வெற்றிவேல், சாந்தி, ரோஸ்மேரி, ஊராட்சி பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.